/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் எருதுகட்டு விழா5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
/
கிருஷ்ணகிரியில் எருதுகட்டு விழா5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் எருதுகட்டு விழா5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் எருதுகட்டு விழா5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : ஜன 18, 2025 01:49 AM
கிருஷ்ணகிரியில் எருதுகட்டு விழா5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை எருது விடும் விழா நடந்தது. இதில், கீழ்புதுார், ஆனந்தநகர், பெருமாள் நகர், மோட்டூர் ஆகிய கிராமங்களில் இருந்து கோவில் காளைகளை அழைத்து வந்து, மாரியம்மன் கோவில் முன்பு ஆட்டை பலியிட்டு பூஜை செய்தனர். பின்னர் காளையின் கயிற்றை இரண்டு பக்கமும் இளைஞர்கள் பிடித்துக் கொண்டு காளையின் முன்பு பொம்மையை வைத்து விளையாட்டுக் காட்டினர். கூட்டத்தில் காளைகள் புகுந்ததால், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
எருதுவிடும் விழாவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள், ராயக்கோட்டை மேம்பாலத்தின் மேலே மற்றும் கீழே நின்று பார்வையிட்டனர். இதையொட்டி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
*தர்மபுரி அடுத்த, நூலஹள்ளியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, எருதாட்டம் நடப்பது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டில், பொங்கல் பண்டிகையையொட்டி, நூலஹள்ளி கோவில் மண்டு நிலத்தில் எருதாட்டம் நேற்று நடந்தது. இதில், நூலஹள்ளி, சின்னநூலஹள்ளி, கவலைக்காரன்கொட்டாய், திருமலைகவுண்டன்கொட்டாய், சவுளூர், கொல்லக்கொட்டாய் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி கொண்டாடினர். சீறிப்பாய்ந்த காளைகளை, இளைஞர்கள் அடக்கியது, கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.