/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தமிழ் தேசிய பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
/
தமிழ் தேசிய பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 04, 2024 09:59 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில், தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை கண்டித்து, நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி செந்தமிழ் சேரன் முன்னிலை வகித்தனர். தமிழ் தேசிய பேரியக்க ஓசூர் செயலாளர் முருகப்பெருமாள், நாம் தமிழர் கட்சி மத்திய மாவட்ட தலைவர் சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறு-வனத்தில், உத்தர்காண்டில் இருந்து பணியமர்த்-தப்பட்டுள்ள தொழிலாளர்களை திரும்ப அனுப்ப வேண்டும். தமிழக பெண்களை வேலைக்கு அமர்த்துவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னு-ரிமை வழங்க வேண்டும். 240 நாட்கள் பணியாற்-றிய அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என, கோஷங்களை எழுப்-பினர். தமிழ் தேசிய பேரியக்க பொதுக்குழு உறுப்-பினர் ஜோக்கிம் நன்றி கூறினார்.