ADDED : செப் 18, 2024 07:24 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், ஈ.வெ.ரா., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், ஈ.வெ.ரா., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
ஊத்தங்கரை ரவுண்டானாவில் ஈ.வெ.ரா., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வடக்கு
குமரேசன், தெற்கு ரஜினி செல்வம், நகர செயலாளர் தீபக், அவை தலைவர் தணிகை குமரன், தி.க., மாவட்ட செயலாளர் பொன்முடி, ஒன்றிய குழு உறுப்பினர் குப்புராஜ் உள்பட பலர் கலந்துக்
கொண்டனர்.
