/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
/
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED : செப் 07, 2024 07:41 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஆர்.பூசாரிப்பட்டி கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராம மக்கள் ஒன்றுகூடி, கங்கா தேவிக்கு பூஜை செய்து பால் குடங்களுடன் மேள தாளம் முழங்க, முத்து மாரியம்மன் புஷ்ப பல்லக்குடன் ஊர்வலமாக வந்தனர். ஆர்.பூசாரிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று, கிராம எல்லையில் அமைந்துள்ள காவல் தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து காவல் தெய்வங்களை சாந்தப்படுத்தும் விதமாகவும், கிராம மக்கள் அனைவரும் நோய் நொடி இன்றி நலமுடன் வாழவும், முத்துமாரியம்மன் உற்சவ சிலைக்கு பால் அபி ேஷகம் செய்தனர். பின்னர் முத்து மாரியம்மன் உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிறப்பு அபி ேஷகமும், கற்பூர தீபாராதனையும் காட்டப்பட்டது.