/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளி மாணவனை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
/
அரசு பள்ளி மாணவனை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஆக 01, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்தவர், 18 வயது மாணவன், அரசு ஆண்கள் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.
கடந்த, 29 இரவு, 9:45 மணிக்கு, கெலமங்கலம் வாணியர் தெருவில் நடந்து சென்றார். அங்கு குடிபோதையில் இருந்த சிலர், மாணவனிடம் தகராறு செய்து, தகாத வார்த்தையால் பேசி, மரக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த மாணவர் புகார் படி, கெலமங்கலம் போலீசார், கெலமங்கலம் வாணியர் தெருவை சேர்ந்த மோகன், 23, தனுஷ், 20, ஜீவா நகரை சேர்ந்த சுத்தரசன், 19, ஆகிய, 3 பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.