/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
/
பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு
ADDED : ஜூலை 02, 2024 06:11 AM
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான வாய்க்கால்களில், முதல்போக பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் மூலம் கீழ்குப்பம், அரசம்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, பாரூர் மற்றும் விருப்பம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி-களில் உள்ள, 2,397 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் நேற்று முதல், நவ., 12 வரை, 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, பாரூர் பஞ்., தலைவர் தமிழ்செல்வி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசா-யிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்று பயனடைய, கலெக்டர் சரயு கேட்டுக் கொண்டுள்ளார்.