/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கணவன் வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த மனைவி பலி
/
கணவன் வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த மனைவி பலி
ADDED : பிப் 25, 2025 06:51 AM
கெங்கவல்லி: கணவன் வெட்டியதில், சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரி-ழந்தார்.சேலம் மாவட் டம், கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 45. ஆட்டோ டிரைவரான இவர், கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால், கடந்த, 19ல், மனைவி தவமணி, 38, மற்றும் மூன்று குழந்தைகளை கண்மூடித்-தனமாக அரிவாளால் வெட்டினார். இதில் மகள் விஜயதாரணி, 13, ஆறு வயது மகன் அருள்பிரகாஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மனைவி தவமணி, மற்றொரு மகள் அருள்பிரகாஷினி, 10, ஆகியோர், சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை, 5:00 மணியளவில் சிகிச்சையில் இருந்த மனைவி தவமணி உயிரிழந்தார். மற்றொரு மகள் அருள்-பிரகாஷினி, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆறு நாட்களுக்கு பின், மனைவி தவமணி இறந்தது அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் டெல்ட்டாரூ.4,300 கோடி முதலீடுகிருஷ்ணகிரி: தைவான் நிறுவனமான, 'டெல்ட்டா எலக்ட்ரானிக்ஸ்', தனது கிருஷ்ணகிரி ஆலையின் விரிவாக்கத்துக்கு, கிட்டத்தட்ட 4,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடந்த 'எலக்ட்ரமா 2025' என்ற மாநாட்டில் பேசிய இந்நிறுவன தலைவர் பெஞ்சமின் லின் இதைத் தெரிவித்தார். பெங்களூருவில் இருந்து 90 கி.மீ., உள்ள கிருஷ்ணகிரியில் இருந்து, பெங்களூருவுக்கு போக்குவரத்து எளிதாக இருப்பதா-கவும், 2015ல் மேக் இன் இந்தியா திட்டத்தில் 4,300 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். டெல்ட்டா எலக்ட்-ரானிக்ஸ் நிறுவனத்துக்கு, இந்தியா முக்கிய சந்தை என்பதால், அதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் பெஞ்சமின் லின் கூறினார்.

