நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகே, குடும்பத்தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
செய்தார்.
ஓசூர் அடுத்த கட்டகானப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி
ரத்தினம்மாள் (35). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முனிராஜுக்கு
குடி பழக்கம் இருந்தது. அவர், வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்ததால், கணவன்,
மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மனமுடைந்த
ரத்தினம்மாள், உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். படுகாயம்
அடைந்த அவர் சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,
பரிதாபமாக இறந்தார். பேரிகை போலீஸார் விசாரிக்கின்றனர்.