ADDED : ஜூலை 26, 2011 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் தனியார் நிறுவனத்தில் நிறுத்தியிருந்த லாரிகளில் 2 லட்சம் மதிப்புள்ள டயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.ஓசூர் ராயக்கோட்டை ஹட்கோ சாலையில் ஃபோர்க் மோட்டார் கம்பெனி உள்ளது.
இந்த கம்பெனியில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் லாரிகளில் இருந்த 15 டயர்களை திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். நிறுவன மேலாளர் பார்த்தசாரதி டவுன் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.