நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி, திருப்பதி வேலி லேஅவுட்டில் வசிப்பவர் சம்பங்கி மனைவி சரோஜம்மா, 55.
இவர் கடந்த, 8 காலை, 10:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு தன் கணவரை சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 5 பவுன் தங்க நகைகள், 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. சரோஜம்மா கொடுத்த புகார்படி, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து, கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.