நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பர்கூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, சந்தைப்பேட்டையை சேர்ந்-தவர் நாசர், 50.
இவர், பர்கூர் -வாணியம்பாடி சாலையில், தன் மஹிந்திரா பிக்கப் வேனில் பழங்கள், மளிகை பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து, வேனை தார்பாயால் கட்டி விட்டு வீட்-டிற்கு சென்றுள்ளார். நள்ளிரவில் திடீரென வேன் தீப்பிடித்து எரிந்துள்ளது. பர்கூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் மளிகை பொருட்கள், பழங்களுடன், வேனும் எரிந்து சாம்பலானது. விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.