ADDED : ஜன 10, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், : ஓசூர் மாநகர, தே.மு.தி.க., சார்பில் நேற்று ஓசூர், ராம்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் மாநகர செயலாளர் ராமசாமி ரெட்டி தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை செயலாளர் ராமலிங்கம் பேசினார். அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரனுக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஓசூர் ஒன்றிய செயலாளர்கள் கண்டராயன், அப்பையா, மாநகர பொருளாளர் அறிவழகன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.