நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம்பெண் மாயம்
ஓசூர்:தளி அருகே, தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் கோபால் மகள் ரஞ்சிதா, 23.
தனியார் கால் சென்டரில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம், 31 மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது தாய் கலாவதி, 45, புகாரில், ஓசூர் ஆவலப்பள்ளியை சேர்ந்த ரவி, 26, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.