ADDED : மார் 04, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளியில் ஆர்ப்பாட்டம்
ஓசூர்:தளியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் நஞ்சாரெட்டி தலைமை வகித்தார். போச்சம்பள்ளியில், பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆசிரியர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும், தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். தளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.