/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புட்டிரெட்டிப்பட்டியில் குடிநீர் வினியோகம்
/
புட்டிரெட்டிப்பட்டியில் குடிநீர் வினியோகம்
ADDED : மார் 25, 2025 12:46 AM
புட்டிரெட்டிப்பட்டியில் குடிநீர் வினியோகம்
கடத்துார்:--கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில், 7 குக்கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் பழைய தெருவில், 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் முறையாக குடிநீர் விடுவதில்லை.
இதனால், குடிநீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். தொடர்ந்து மக்கள் குடிநீர் தேடி அலைந்து வந்தனர். நேற்று முன்தினம் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்து, புட்டிரெட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, காலி குடங்களுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, நம் 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று படத்துடன், செய்தி வெளியானது. இதை அடுத்து மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவின் படி, கடத்துார் பி.டி.ஓ., கலைச்செல்வி, துணை பி.டி.ஓ., வீரமணி உள்ளிட்ட அதிகாரிகள், ஊராட்சியில் முகாமிட்டு பழுதான மின் மோட்டாரை சரிசெய்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்தனர். கடந்த, 20 நாட்களுக்கு பிறகு குடிநீர் வந்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.