ADDED : மார் 27, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அங்கன்வாடி மையங்கள் திறப்பு
ஓசூர்:ஓசூர் ஒன்றியம், பேகேப்பள்ளி பஞ்., உட்பட்ட கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 16.55 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, துணை செயலாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 5வது வார்டு அண்ணாமலை நகரில், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, 16.40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை, ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் திறந்து வைத்தனர். மண்டல தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.