ADDED : ஏப் 11, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழையால் மக்கள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளியில் நேற்று பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வேப்பனஹள்ளியில் நேற்றும் காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியத்திற்கு மேல் திடீரென கருமேகம் சூழ்ந்து மதியம், 3:00 மணி முதல், 4:---00 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை, 4:30 மணி முதல், சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து, குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.