ADDED : ஏப் 12, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரையில் பலத்த மழை
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, பாவக்கல், அனுமன்தீர்த்தம், கல்லாவி, சாமல்பட்டி பகுதிகளில், காலை முதலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
மாலை, 6:00 மணிக்கு மேல் அரை மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. திடீர் மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.