ADDED : ஏப் 15, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்யாண முருகர் திருக்கல்யாணம்
பர்கூர்:பர்கூர் தாலுகா, சிகரலப்பள்ளி திருச்செங்குன்றம் கல்யாண முருகர் கோவிலில், 72ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த, 7ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் கல்யாண முருகருக்கு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று கல்யாண முருகர், வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.