ADDED : ஏப் 18, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, நேற்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 7.850 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.