/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வருவாய்த்துறை சங்கங்களின்கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
வருவாய்த்துறை சங்கங்களின்கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 26, 2025 01:39 AM
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சசிக்குமார், நீலகண்டன், சுபாஷினி, தபரேஷ், சிலம்பரசன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும், மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட, எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். வட்ட பொறுப்பாளர்
வரதராஜ் நன்றி கூறினார்.
அதேபோல், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் சூளகிரி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.