நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் அருகே, இரு பெண்கள் மாயமானதால், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பத்தலப்பள்ளி பாஸ்கர்தாஸ் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் மகள் சுப்புலட்சுமி, 19. ஓசூர் தனியார் கல்லுாரியில், பி.எஸ்.சி., முதலாமாண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
அவரது தந்தை ராஜ்குமார் கொடுத்த புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.* பேரிகை அருகே, பி.சிங்கிரிப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ் மகள் நிர்மலா, 19. நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை முனிராஜ் பேரிகை போலீசில் கொடுத்த புகாரில், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த கூலித்
தொழிலாளி முனிராஜ், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.