ADDED : ஜூலை 18, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கவுண்டனுார் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம், சின்னவன் என்பவரின் விவசாய நிலத்தில் மின்கம்பம் உள்ளது. இதன் மூலம், பல பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
இக்கம்பத்தின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து விழுந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில், கம்பம் மிகவும் வலுவிழுந்து உடைந்து விழும் நிலையில் இருந்தது-. இது குறித்து செய்தி, படம் கடந்த ஜூன், 12ல், நம், 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது. இதையடுத்து மின்வாரியத்தினர், அந்த வலுவிழந்த மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பத்தை அமைத்துள்ளனர்.

