ADDED : அக் 10, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊத்தங்கரையில் இன்று முதல், 14ம் தேதி வரை, ஊத்தங்கரை வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், முதலாமாண்டு புத்தக திருவிழா ஊத்தங்கரையில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைக்கிறார். காலை, 10:00 மணிக்கு புத்தக அரங்கத்தை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தொடங்கி வைக்கிறார். மாலை, 4:00 மணிக்கு, சிந்தனை அரங்கத்தை ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தொடங்கி வைக்கிறார்.
ஐந்து நாட்களும் தினமும் மாலை, 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தினமும் காலை, 9:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, புத்தகங்கள் விற்பனை நடக்கும் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளன. அனுமதி இலவசம். இவ்வாறு விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.