/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநகராட்சியில் நியமன கவுன்சிலர்
/
மாநகராட்சியில் நியமன கவுன்சிலர்
ADDED : நவ 28, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்கும் வகையில், சட்டப்பேரவையில், மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. அதன் படி, ஓசூர் மாநகராட்சியில் ராதா ஞானசேகரன் என்பவர் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் முன்னிலையில், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகமது ஷபீர் ஆலம், ராதா ஞானசேகரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

