ADDED : மார் 05, 2026 05:01 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த, 510 பேரை போலீசார் கைது செய்தனர்.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்பதாம் நாளான நேற்று, தமிழ்நாடு வருவாய்த் துறை கூட்டமைப்பினர் சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் போராட்டம் நடந்தது. பெரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை வைத்தார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க, மாவட்ட செயலாளர் அறிவழகன் மற்றும் வருவாய்த்துறை கூட்டமைப்பு நிர்வாகிகள் பாலசுப்ர மணியன், பெரியசாமி, சின்னசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், அலுவலர்களின் உயிர் மற்றும் உடல்களை பாதுகாக்கவும் குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனை
சட்டத்தை நிறைவேற்றும் வகையில், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்ட வருவாய் துறை சங்கங்களை சேர்ந்த, 140 பெண்கள் உட்பட, 510 பேரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

