ADDED : ஏப் 02, 2026 04:46 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த அஸ்தகிரியூரில் கந்தர் மலை முருகன் கோவிலில், நேற்று நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள், 25 அடி நீளம் முதல், பல்வேறு அளவுகளில் வேல் குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் 4 கி.மீ., துாரம் ஊர்வலமாக வந்தனர். பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று பத்திரெட்டிஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார், ஒடசல்பட்டி, பொம்மிடி, ரேகடஹள்ளி, அண்ணா நகர், பையர்நத்தம் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டது.
