/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளஸ் 1 தேர்வு706 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 1 தேர்வு706 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 06, 2025 01:17 AM
பிளஸ் 1 தேர்வு706 பேர் 'ஆப்சென்ட்'
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று துவங்கிய பிளஸ் 1 தேர்வில், 706 மாணவ, மாணவியர் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வுகள் நேற்று துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 191 அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 22,626 மாணவ, மாணவியர், 274 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர் என மொத்தம் 22,900 மாணவ, மாணவியருக்கு, 87 மையங்களில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது.
நேற்று தமிழ் தேர்வை, 22,194 மாணவ, மாணவியர் எழுதினர். தேர்வுக்கு, 706 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் வந்து செல்ல பஸ் வசதிகளும், தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலி டாக்டர் சிக்கினார்
ஓசூர்:திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், 51. இவர், ஓசூரிலுள்ள பாகலுார் சாலையில் தங்கி, கதிரேப்பள்ளி பகுதியில் கிளினிக் நடத்தி, நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. அதன்படி, ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் லட்சுமிஸ்ரீ, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜிவ்காந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர், ஹட்கோ போலீசார் பாதுகாப்புடன், அவரது கிளினிக்கில் சோதனை செய்தனர். அப்போது, எம்.எஸ்சி., பட்டதாரியான விஸ்வநாதன், மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது தெரிந்தது.
அதனால், மருந்து மாத்திரைகளை மருத்துவ குழுவினர் பறிமுதல் செய்து, கிளினிக்கிற்கு, 'சீல்' வைத்தனர். மேலும், அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் லட்சுமிஸ்ரீ கொடுத்த புகார்படி, விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே கடந்த, 2020 மே, 1 ல், புக்கசாகரம் பகுதியில், மருத்துவ சிகிச்சை அளித்ததாக கைது செய்யப்பட்டார் என, மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.