/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருதுவிடும் விழா10 பேர் மீது வழக்கு
/
எருதுவிடும் விழா10 பேர் மீது வழக்கு
ADDED : மார் 04, 2025 01:32 AM
எருதுவிடும் விழா10 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்திய, 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர் அடுத்த ஜெகதேவியில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறவில்லை. அப்பகுதி வி.ஏ.ஓ., தீபா புகார் படி, பர்கூர் போலீசார் கோபி, 49, அமுல்தாஸ், 29, அன்பு, 27, கமல்தாஸ், 44, ஸ்ரீகாந்த், 45 ஆகிய, 5 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்த அகரத்தில் அனுமதியின்றி நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்ததாக இட்டிக்கல் அகரம் வி.ஏ.ஓ., ஹரிதாஸ் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் ஜெயவேல், 32 உள்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
அதேபோல பாகலுார் அடுத்த தேவீரப்பள்ளியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக பாலிகானப்பள்ளி வி.ஏ.ஓ., வெங்கடேசன் பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார், ஓட்டலியப்பா, 48 என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.