/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு
/
விவசாயி வீட்டில் 14 பவுன் நகை திருட்டு
ADDED : ஜூலை 06, 2024 06:38 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே கர்னப்-பள்ளியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி சாரதா, 35, விவசாயி; கடந்த, 2 காலை, 6:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு பெங்களூருவிற்கு சென்றார். மறுநாள் மாலை, 6:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பி வந்த சாரதா, கதவின் பூட்டு உடைக்-கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 14 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக, பாலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் சோதனை செய்து, 4 வித-மான கைரேகைகளை பதிவு செய்தனர். அவற்றை பழைய குற்ற-வாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்து, போலீசார் விசாரித்து வருகின்-றனர்.