/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வனத்தில் 2 மண்டை ஓடுகள்: போலீஸ் விசாரணை
/
வனத்தில் 2 மண்டை ஓடுகள்: போலீஸ் விசாரணை
ADDED : அக் 04, 2024 01:23 AM
வனத்தில் 2 மண்டை ஓடுகள்: போலீஸ் விசாரணை
அரூர், அக். 4-
அரூர் அருகே, வனப்பகுதியில் இருந்த, 2 மண்டை ஓடுகளை, போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாம்பாடி பீட் இளையான்குளம் வேடியப்பன் கோவில் வனப்பகுதியில் நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு தீர்த்தமலை வனக்காப்பாளர் குப்புசாமி, 53, ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்கு அடையாளம் தெரியாத, 2 மண்டை ஓடுகள், தலைமுடி, கீழ்தாடை எழும்பு, 5 எலும்புகளுடன் நீலக்கலர் ஜாக்கெட், சேலை, வளையல், லுங்கி, மருந்து, செருப்பு மற்றும் மது பாட்டில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர், அரூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடம் சென்ற போலீசார் மண்டை ஓடுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'கடந்த மே., 13ல் வெளாம்பட்டியை சேர்ந்த சின்னக்குழந்தை, 70, அவரது மனைவி சாரதா, 65, ஆகியோர் காணாமல் போனதாக ஏற்கனவே அவரது குடும்பத்தினர், அரூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தம்பதியர் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம், மண்டை ஓடுகள் மருத்துவ ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, மருத்துவ அறிக்கை கிடைத்த பின் உறுதிப்படுத்தப்படும்' என்றனர்.

