ADDED : செப் 11, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரத்தை சேர்ந்தவர் ஹேமா-வதி, 19; இரண்டாமாண்டு கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப-வில்லை. மாணவியின் பெற்றோர் புகார்
படி, காவேரிப்பட்-டணம் போலீசார் விசாரிக்கின்றனர். பர்கூர், வி.ஐ.பி., நகரை சேர்ந்-தவர் சவுமியா, 27; இவருக்கு திருமணமாகி, 9 ஆண்டுகள் ஆன நிலையில் இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 27ல், தன் இரு குழந்தைகளுடன்
வீட்டிலிருந்து சென்ற சவுமியா, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் முரளி புகார் படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.