/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எம்.சாண்ட் கடத்திய4 லாரிகள் பறிமுதல்
/
எம்.சாண்ட் கடத்திய4 லாரிகள் பறிமுதல்
ADDED : மார் 06, 2025 01:16 AM
எம்.சாண்ட் கடத்திய4 லாரிகள் பறிமுதல்
ஓசூர்:ஓசூர், மத்திகிரி ஆர்.ஐ., தருமன் மற்றும் அலுவலர்கள், ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில், பஞ்சாட்சிபுரம் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 3 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது, 12 யூனிட் எம்.சாண்ட், 6 யூனிட் ஜல்லி கற்களை, கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது. லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
அதேபோல், உத்தனப்பள்ளி - கெலமங்கலம் சாலையிலுள்ள போடிச்சிப்பள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே வாகன சோதனை செய்த வி.ஏ.ஓ., முனியப்பா மற்றும் அதிகாரிகள், 2 யூனிட் ஜல்லியை கர்நாடகாவிற்கு கடத்திச்சென்ற மினி டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து, லாரி டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.