தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4,000 கன அடியாக அதிகரிப்பு


ADDED : மார் 28, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து

4,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்:

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 4,000 கன அடியாக அதிகரித்தது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த, 10 நாட்களுக்கு மேலாக நீர்வரத்து வினாடிக்கு, 1,500 கன அடியாகவே இருந்தது. கடும் வறட்சியால், கர்நாடகா காவிரி கரையோர மக்களின் குடிநீர் தேவை மற்றும் தமிழக எல்லை பகுதியை கடந்து பாலாற்றில் இருந்து, மாதேஷ்வரன் மலைக்கு பைப் லைன் மூலமும் கர்நாடக அரசு குடிநீர் எடுத்து வருகிறது.

நாளை அமாவாசை நாளில், மாதேஸ்வரன் மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், ‍தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 3,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 4,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், அங்குள்ள மெயின் அருவி, சினி அருவி, மெயின் பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us