தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காசநோய் இல்லாத 44 பஞ்.,களுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கல்

காசநோய் இல்லாத 44 பஞ்.,களுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கல்

காசநோய் இல்லாத 44 பஞ்.,களுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கல்


ADDED : ஏப் 08, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காசநோய் இல்லாத 44 பஞ்.,களுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கல்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள், கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவை பெட்டி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம், 401 மனுக்களை வழங்கினர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு, 3,000 ரூபாய் மதிப்பில் காதொலி கருவி மற்றும், 6,359 ரூபாய் மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம் மாவட்டத்தில் காசநோய் இல்லாத ஊராட்சிகள் என்ற நிலையை அடைந்த, 44 பஞ்.,களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், சமூக பாதுகாப்பு திட்ட தனி தணை கலெக்டர் தனஞ்ஜெயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us