/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கடையில் 4.5 பவுன் நகை திருடிய மூவருக்கு வலை
/
கடையில் 4.5 பவுன் நகை திருடிய மூவருக்கு வலை
ADDED : ஜன 24, 2025 01:38 AM
கடையில் 4.5 பவுன் நகை திருடிய மூவருக்கு வலை
ஓசூர், : பாகலுார், மாலுார் சாலையை சேர்ந்தவர் ராம்லால், 39. அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த, 19 மதியம், 2 பெண்களுடன் ஒரு நபர் வந்துள்ளார். அவர்கள் காது தோடு வாங்குவது போல் நகைகளை பார்த்துள்ளனர். ராம்லால் நகைகளை காட்டும்போது, அவருக்கு தெரியாமல், நான்கரை பவுன் நகைகளை திருடியுள்ளனர். பின்னர், நகைகள் எதுவும் பிடிக்கவில்லை எனக்கூறி சென்றுள்ளனர். அவர்கள் சென்றபின், கடையில் இருந்த, நான்கரை பவுன் நகைகள் காணாமல் போனது தெரிந்தது. ராம்லால், பாகலுார் போலீசில் அளித்த புகார் படி, நகை திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

