ADDED : ஜூலை 02, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : ஓசூர், மத்திகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், கர்னுார் கிராமத்தில் பழைய ஆனைக்கல் சாலையி-லுள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றனர்.
அப்போது, அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த, 5 பேரை பிடித்து விசாரித்தபோது, ஓசூர் அந்திவா-டியை சேர்ந்த ஹேமந்த், 20, மதுபாலன், 19, மனோஜ், மிடிகிரிப்-பள்ளியை சேர்ந்த வினோத், 26, சின்னமேனகரத்தை சேர்ந்த அசோக், 29, என தெரிந்தது. அவர்கள் மீது, அஞ்செட்டி ஸ்டேஷனில் கடந்த, 2022 ல் நடந்த ஒரு கொலை வழக்கு இருப்-பதும் தெரிய வந்தது. தொடர் விசாரணையில், 5 பேரும் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது தெரிந்-ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.