/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் மாவட்டத்தில் 5.61 லட்சம் பேர் பயன்

ADDED : ஆக 26, 2024 08:27 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் கடந்த, 2021, ஆக., 5ல், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை துவக்கி வைத்து, முதல் பயனாளியின் இல்லத்திற்கு நேரில் சென்று, மருந்து பெட்டகத்தை வழங்கினார் .
மாவட்டத்தில் இதுவரை, 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில், மொத்தம் 5,61,486 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். அவர்களது நோய் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, பக்கவிளைவுகள் மற்றும் உயிரிழப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. சிறப்பாக பணியாற்றிய இடைநிலை சுகாதார சிகிச்சையாளர்கள், நோய் ஆதரவு சிகிச்சையாளர்கள், தொற்று நோய் செவிலியர்கள் என மொத்தம், 14 பேருக்கு, 4ம் ஆண்டு துவக்க விழாவில், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.