/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
5.67 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.6.41 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு
/
5.67 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.6.41 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு
5.67 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.6.41 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு
5.67 லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.6.41 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு
ADDED : ஜன 10, 2025 01:31 AM
ஓசூர், : கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 5,67,710 ரேஷன்கார்டுதாரர்களுக்கு, 6.41 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் துவங்கியது. பர்கூர் அடுத்த, கந்திகுப்பம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ரேஷன் கடையில், 931 ரேஷன்கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளை, மாவட்ட கலெக்டர் சரயு வழங்கி துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 120 தொடக்க வேளாண் சங்கங்களின் கீழுள்ள, 1,094 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தங்களுக்குரிய ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் சரயு கூறினார்.
கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுமேலாளர் சக்தி சாரள், கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள் (பொது வினியோக திட்டம்) குமார், பெரியசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 22வது வார்டு முனீஸ்வரன் நகரிலுள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது. ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவரும் அப்பகுதி வார்டு, தி.மு.க., கவுன்சிலருமான மாதேஸ்வரன் தலைமை வகித்து, பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் இலவச வேஷ்டி, சேலைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
ஓசூர் முனீஸ்வரர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

