/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
70 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
/
70 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
ADDED : மார் 06, 2025 01:19 AM
70 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
கிருஷ்ணகிரி:கர்நாடகாவுக்கு லாரியில் கடத்திய, 70 டன் ரேஷன் அரிசியை கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சேலம் டி.எஸ்.பி., வடிவேல் தலைமையில், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ.,க்கள் பெருமாள், வள்ளியம்மாள், கதிரவன், மற்றும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பி பிரிவு போலீசார், பறக்கும்படை அலுவலர்களுடன் பல குழுக்களாக பிரிந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் மாலை, ஜக்கேரி பஸ் ஸ்டாப் அருகில், ராயக்கோட்டை கெலமங்கலம் சாலையில் வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ அளவில், 468 மூட்டைகளில், 23.40 டன் ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கடத்தியது தெரிந்தது. லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ராஜகொல்லஹள்ளியை சேர்ந்த ஸ்ரீதரன், 27 என்பவரை கைது செய்தனர். அவரது தகவல் படி, ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே சென்ற மற்றொரு லாரியை மடக்கி சோதனையிட்டதில், 19.50 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்து, லாரியை ஓட்டி வந்த ராஜகொல்லஹள்ளியை சேர்ந்த மணி, 33 என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், பல இடங்களில் ரேஷன் அரிசி வாங்கி, மில்லில் பாலீஷ் செய்து வெளி மாநிலங்களில் விற்கும் தொழிலில் ஈடுபட்டது, சேலத்தை சேர்ந்த தண்டபாணி, 39, என்பதும், அவர் கள்ளக்
குறிச்சி மாவட்டம், பாங்காநத்தம் அருகிலுள்ள மில்லில் பாலீஷ் செய்வதும் தெரிந்தது. அந்த மில்லில் பதுக்கிய, 27 டன் ரேஷன் அரிசி, ஒரு தோஸ்த் பிக்கப் வேனை போலீசார்
பறிமுதல் செய்தனர்.இவ்வழக்கில் மொத்தமாக, 70 டன் ரேஷன் அரிசியுடன், 2 லாரி, பிக்கப் வேனை பறிமுதல் செய்த போலீசார், அரிசி கடத்தலில் ஈடுபட்ட தண்டபாணி, 39, ஸ்ரீதரன், 27, மணி, 33 ஆகிய மூவரை கைது
செய்துள்ளனர்.