/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
750 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
/
750 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ADDED : ஆக 26, 2024 08:22 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 11ம் ஆண்டாக கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா, தேன்கனிக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 750 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடந்தது. ஒவ்வொரு கர்ப்பிணிக்கும், புடவை, வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள், தேங்காய், பிஸ்கட் உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தட்டுகளை எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் வழங்கினார்.
டாக்டர் பிரபாவதி, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் குறித்து விளக்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், மகப்பேறு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பல் பராமரிப்பு குறித்து, டாக்டர் கஜபதி விளக்கமளித்தார். கர்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. கெலமங்கலம் வட்டார கண்காணிப்பாளர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

