தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி பாலிடெக்னிக்கில்8ல் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி பாலிடெக்னிக்கில்8ல் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி பாலிடெக்னிக்கில்8ல் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : மார் 06, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி பாலிடெக்னிக்கில்8ல் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வரும், 8ல், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

காலை, 9:00 மணிக்கு துவங்கி மதியம், 3:00 மணி வரை நடக்கும் முகாமில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்களான அசோக் லேலண்ட், டி.வி.எஸ்., டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 5,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில், 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள் என அனைத்து வித கல்வி தகுதியினரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.

எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள அனைவரும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 - 291983 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us