/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
300 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
/
300 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
ADDED : மே 13, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணத்தில்,
அகரம் சாலையிலுள்ள ஒரு குடோனில், குட்கா பதுக்கி உள்ளதாக தகவலின்
படி, காவேரிப்பட்டணம் எஸ்.ஐ., மோகன்ராஜ், ஏட்டு சரவணன் ஆகியோர்
நேற்று அங்கு சோதனை செய்தனர்.
அதில், 300 கிலோ எடையுள்ள, 1.70 லட்சம்
ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
குடோனின் உரிமையாளரான கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த
மகேந்திரகுமார் சிங், 28, என்பவரை கைது செய்து, குடோனுக்கு, 'சீல்'
வைத்தனர்.