/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
/
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 03, 2024 07:51 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில், கிருஷ்ணகிரியி-லுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பாரம்பரிய கலைக-ளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகி-றது. இதில், 13 முதல், 25 வயது வரையிலான இருபாலரும் சேரலாம். பயிற்சி காலம், 3 ஆண்டுகள். பயிற்சி முடிவில் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்-டணம் ஏதுமில்லை. சிறப்பு கட்டணமாக ஆண்டிற்கு, 350 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு டவுன் பஸ்சில் இலவச பஸ் பயணச்சலுகை உண்டு.
மாணவர்களுக்கு மாதந்தோறும், 400 ரூபாய் கல்வி உதவித்-தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலை-களை படிக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், திருமலை நகர், ராமாபுரம், கிருஷ்ணகிரி - 635 115 என்ற முகவ-ரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்-துள்ளார்.