/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வி.சி.க.,வினர் உட்பட 95 பேர் மீது வழக்கு
/
வி.சி.க.,வினர் உட்பட 95 பேர் மீது வழக்கு
ADDED : டிச 07, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மத்திகிரி அருகே குமார-னப்பள்ளியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான, 2.33 ஏக்கர் நிலத்தில், 42 ஏழை குடும்பங்களுக்கு முறையாக பட்டா வழங்க வேண்டும் என கூறி, வி.சி.கட்சி கிருஷ்ணகிரி பார்-லிமென்ட் தொகுதி செயலர் செந்தமிழ் தலைமையில், நேற்று முன்தினம் அப்பகுதியில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, குமாரனப்பள்ளி வி.ஏ.ஓ., ராகவேந்திரன் கொடுத்த புகார்படி, செந்தமிழ் மற்றும் 35 பெண்கள் உட்பட, 95
பேர் மீது, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.