/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயியை வெட்டிய சித்தப்பா கைது
/
விவசாயியை வெட்டிய சித்தப்பா கைது
ADDED : ஜூலை 06, 2024 06:42 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சாரகப்-பள்ளி அருகே கொடியாளத்தை சேர்ந்தவர் தேவராஜ், 28, விவ-சாயி; இவர் எட்டு ஆண்டுக்கு முன், 47 சென்ட் நிலத்தை தனது சித்தப்பா நாராயணப்பா, 55, என்பவருக்கு, 9 லட்சம் ரூபாய்க்கு விற்றார். அதில், 3 லட்சம் ரூபாயை வழங்கிய நாராயணப்பா, மீத-முள்ள, 6 லட்சம் ரூபாயை வழங்காமல் இருந்தார்.
இதனால் ஊர் பெரியவர்கள் முன்னிலையில், அப்பகுதியில் உள்ள செம்புலிங்கேஸ்வரா கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது, பணம் கொடுக்க முடியாது என கூறிய நாராயணப்பா, கத்தியால் தேவராஜின் நெற்றியில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த தேவராஜ், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகார்படி, நாராயணப்பாவை தளி போலீசார் நேற்று கைது செய்-தனர்.