/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாய்க்காலில் உபரி நீர் திறக்க கோரிக்கை
/
வாய்க்காலில் உபரி நீர் திறக்க கோரிக்கை
ADDED : ஆக 01, 2024 01:47 AM
தர்மபுரி: கிருஷ்ணகிரி அணை வலது புற வாய்க்காலில், உபரி நீரை திண்டல் ஏரிக்கு திறந்து விட வேண்டுமென, பந்தாரஹள்ளி பஞ்., சேர்ந்த, பாசன விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தசாமி மற்றும் பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் சாந்தியிடம் நேற்று மனு அளித்தனர்.
அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: காரிமங்கலம் ஒன்றியம், பந்தாரஹள்ளி பஞ்.,ல் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழை குறைவால், விவசாயம் நலிவ-டைந்தது. இந்த பஞ்.,ல் உள்ள, 8 ஏரிகள் வறண்டுள்ளது. இதனால் விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் தட்டுப்-பாடு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு, கிருஷ்ணகிரி அணை வலது-புற வாய்க்காலில் இருந்து, உபரி நீர் திறந்து விடுவதில் காலதா-மதம் மற்றும் குளறுபடி ஏற்பட்டதால், திண்டல் ஏரி வாய்க்கால் பாசனத்திலுள்ள ஏரிகளுக்கு, தண்ணீர் செல்லவில்லை.
தற்போது, கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளளவை எட்டி உள்-ளதால், வலதுபுற வாய்க்காலில் உபரி நீரை உடனடியாக, திறந்து விட நடவடிக்கை எடுப்பதுடன் அனைத்து ஏரிகளுக்கும் முறை-யாக, தண்ணீர் செல்ல அதிகாரிகள் மூலம், கண்காணித்து தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்-வாறு, அதில்
தெரிவித்துள்ளனர்.