/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பல்நோக்கு கட்டடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
/
பல்நோக்கு கட்டடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
பல்நோக்கு கட்டடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
பல்நோக்கு கட்டடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
ADDED : ஆக 29, 2024 01:31 AM
ஓசூர், ஆ'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, பல்நோக்கு கட்டடத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், தியாகரசனப்பள்ளி பஞ்., உட்பட்ட பீரேபாளையம் கிராமத்தில், கிருஷ்ணகிரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 6.10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம் திறக்கப்படாமல் மூடியே உள்ளது. ரேஷன் கடைக்காக கட்டப்பட்ட இக்கட்டடம் மக்கள் பயன்பாட்டிற்கு வராததால், 5 கி.மீ., தொலைவில் உள்ள மாதர்சனப்பள்ளி கிராமத்திலுள்ள ரேஷன் கடைக்கு மக்கள் சென்று வர வேண்டியுள்ளது.
இது குறித்த விரிவான செய்தி கடந்த, 21ல், 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி, சூளகிரி ஒன்றியம் நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, பல்நோக்கு கட்டடத்தை கட்டிய
ஒப்பந்ததாரருக்கு முழு தொகையும் வழங்கப்படவில்லை என்பதும், அதனால் அவர் பஞ்., நிர்வாகத்திடம் கட்டடத்தை ஒப்படைக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
விரைவில், ஒப்பந்ததாரருக்கு முழு தொகையையும் வழங்கி, மக்கள் பயன்பாட்டிற்கு கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு சூளகிரி பி.டி.ஓ., உமாசங்கர் அறிக்கை அளித்துள்ளார்.

