/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கனவு இல்ல திட்டம்: சிறப்பு கிராம சபை
/
கனவு இல்ல திட்டம்: சிறப்பு கிராம சபை
ADDED : ஜூலை 03, 2024 07:56 AM
பாலக்கோடு : பாலக்கோடு அடுத்த ஜெர்தலாவ் பஞ்., பி.செட்டிஹள்ளி மற்றும் பேளாரஹள்ளி பஞ்.,களில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்பு பழுது பார்க்கும் திட்டம் குறித்து, சிறப்பு கிராம சபை கூட்டம் பஞ்., தலைவர்கள் முத்துமணி மற்றும் கணபதி ஆகியோரின் தலைமையில் நடந்தது.
ஊரக வளர்ச்சி தணிக்கை உதவி இயக்குனர் நாகராஜ் முன்னி-லையில் இக்கூட்டம் நடந்தது. இதில், நடப்பு ஆண்டில் தமிழக அரசின் சார்பில், ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்காக பய-னாளிகளை தேர்ந்தெடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஏற்கனவே கட்டப்பட்டு பழுதான நிலையிலுள்ள ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் கூரை வீடுககளை சீரமைக்க, பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் குறித்து விவாதிக்கப்
பட்டது.
இதில், பஞ்., செயலாளர்கள் செயலாளர்கள் சஞ்சீவன், கோவிந்தன் முருகேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது-மக்கள் பங்கேற்றனர். நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியில் பஞ்., தலைவர் கலைச்செல்வன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டி, ஒன்றியத்திலுள்ள, 19 ஊராட்சிகளிலும், நேற்று கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பழுதடைந்த ஊரக வீடுகள் சீரமைப்பு திட்ட பயனாளிகள் தேர்வு, சிறப்பு கிராம சபை கூட்டம்
நடந்தது.
இதை பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், கலைவாணி, மேற்பார்வை-யிட்டனர். இதேபோன்று, கடத்துார் ஒன்றியத்தில், 25 ஊராட்சிக-ளிலும் நடந்தது.