/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற யானை
/
பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற யானை
பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற யானை
பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற யானை
ADDED : பிப் 24, 2025 03:44 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனச்-சரக யானைகள், வனத்தை ஒட்டிய பகுதிதோட்டத்தில் புகுவது வாடிக்கையாக உள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே நொகனுார் கிராமத்தில், ஒற்றை ஆண் யானை நேற்று காலை சுற்றித்திரிந்தது. இதேபோல் தேன்கனிக்கோட்டை முள்பிளாட் வனத்தில் முகா-மிட்டிருந்த ஒற்றை ஆண் யானை, உப்பராயனப்பள்ளி, நேரலட்டி வழியாக அகலக்கோட்டையை அடுத்த மல்லேஸ்வரா மலை பின்-புறமுள்ள கூடன்ஏரி பகுதிக்கு, காலை, 9:00 மணிக்கு வந்தது.
அங்கு விவசாய நிலத்தில் கட்டியிருந்த விவசாயி முத்தப்பா-வுக்கு சொந்தமான, எட்டு மாத கன்று குட்டியை தந்தத்தால் குத்தி கொன்றது. தோட்டத்தில் மனைவியுடன் நின்றிருந்த முத்-தப்பா, இதைப்பார்த்து மனைவியுடன் ஓட்டம் பிடித்தார். அதே தோட்டத்தில் பம்ப் செட் கொட்டகை கூரையை சேதப்படுத்திய யானை, ஜவளகிரி அருகே ஜல்லி மாரியம்மன் கோவிலை ஒட்டிய வனப்பகுதிக்குள் சாவகாசமாக சென்றது.
பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்த யானை, கன்றுக்குட்டியை கொன்றது, அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி-யது.

